Pages

Tuesday, July 30, 2013

பள்ளிக் கல்வித் துறையில் மொத்தம் 7 இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணை இயக்குநர்கள் 2 பேருக்கு இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் எஸ்.கண்ணப்பன், கே.தங்கமாரி ஆகியோர் இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குநராக கே.தங்கமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட இயக்குநர்கள் விவரம் (அடைப்புக் குறிக்குள் இப்போது வகிக்கும் பதவி):

1. வி.சி.ராமேஸ்வர முருகன் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்குநர்)

2. கே.தேவராஜன் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பள்ளிக் கல்வி இயக்குநர்)

3. தண்.வசுந்தராதேவி - உறுப்பினர்-செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் (அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்)

4. ஆர்.இளங்கோவன் - தொடக்கக் கல்வி இயக்குநர் (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர்)

5. ஆர்.பிச்சை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (செயலர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்)

6. ஏ.சங்கர் - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் (விடுப்பில் இருந்தார்)

7. எஸ்.அன்பழகன் - செயலர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் (விடுப்பில் இருந்தார்)

8. எஸ்.கண்ணப்பன் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் (இணை இயக்குநர், பணியாளர் நலன்)

9. கே.தங்கமாரி - ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குநர் (அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்))

பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்களாக உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் (பள்ளிக் கல்வி) க.அறிவொளி, முறைசாராக் கல்வித் திட்ட இயக்குநர் வி.மோகன்ராஜ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment