Pages

Wednesday, May 15, 2013

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி மத்திய அரசு ஒப்புதல

  2012–13–ம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்.) 8.5 சதவீதம் வட்டி வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை, ‘இ.பி.எப்.’ அமைப்பின் மத்திய ஆணையர் அனில் ஸ்வரூப் நிருபர்களிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டின் வட்டி விகிதத்தை (8.25) விட இந்த ஆண்டு 0.25 சதவீதம் அதிகமாகும். இதற்கான முடிவை கடந்த பிப்ரவரி மாதத்தில் ‘இ.பி.எப்.’ அமைப்பின் உயர் அதிகார குழு எடுத்து இருந்தது. இந்த முடிவுக்கு தற்போது நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 5 கோடி தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

No comments:

Post a Comment