Pages

Wednesday, May 15, 2013

சமையல் கியாஸ் மானியத்தை ஜூன் 1–ந் தேதி முதல் பெறலாம்: புதுச்சேரி உள்பட 20 மாவட்டங்களில் அமல்

  சமையல் கியாஸ் மானிய தொகையை வங்கி கணக்கில் பெறும் நடைமுறை, ஜூன் 1–ந் தேதி முதல், புதுச்சேரி உள்பட 20 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு முறை சிலிண்டர் பதியும்போதும் வங்கி கணக்கில் ரூ.435 போடப்படும். உங்கள் பணம் உங்கள் கையில் மத்திய அரசு வழங்கி வரும் மானியம் மற்றும் நலத்திட்ட நிதிஉதவிகள் தவறாக திருப்பிவிடப்படுவதாக புகார்கள் வந்தன.

எனவே, உரிய பயனாளிகள் கையில் பணம் சென்றடையும் வகையில், ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது. ‘ஆதார்’ எண்ணுடன் இணைந்த வங்கி கணக்கு மூலமாக பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி, இதுவரை, ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை போன்ற நிதிஉதவிதான் வழங்கப்பட்டு வருகிறது. சமையல் கியாஸ் இந்நிலையில், சமையல் கியாசுக்கான மானியத்தொகையையும் இத்திட்டத்தின் கீழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது, ஜூன் 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்த தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அ

No comments:

Post a Comment