Pages

Thursday, May 02, 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதளங்கள்

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge3. tn.nic.in ஆகிய இணையதளங்களில் மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தனியார் இணையதளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

எனவே, அரசு இணையதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment