Pages

Wednesday, September 12, 2012

கட்டண நிர்ணய காலம் முடிந்த பள்ளிகளுக்கு புதிய கட்டணம்  

     கல்விக் கட்டண நிர்ணயக் காலம் முடிவடைந்த, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, மீண்டும் மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக, கோவிந்தராஜன் இருந்தபோது, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டார். அதன்படி, 2009ல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டதால், 2012-15க்கான, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து, குழுத் தலைவர் சிங்காரவேலு உத்தரவிட்டு உள்ளார்.

மாவட்ட வாரியாக, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, புதிய கட்டண விவரம், tnptfmani.blogspot.com  வெளியிடப்பட்டு உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், கணிசமான அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment