Pages

Tuesday, August 14, 2012

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதலாக தையல் இயந்திரங்கள்: அரசு உத்தரவு


பெரம்பலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதலாக 1,600 விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்க இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விலையில்லா தையல் இயந்திரங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த உதவும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதலாக 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment