Pages

Saturday, August 18, 2012

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும


திருப்பூர் மாவட்டத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவோர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவண படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுளளது.  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை இல்லாதவர்கள்  உதவித்தொகை பெற்று வரும் பதிவுதாரர்கள் சுய உறுதி மொழி ஆவணப்படிவத்தை வரும் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.  சுய உறுதிமொழி ஆவணம் அளித்த பின், 2012 செப்டம்பர் மாத காலாண்டுக்கான உதவித்தொகை அளிக்கப்படும். சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க வரும்போது வேலை வாய்ப்பு பதிவு அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஒப்பளிப்பு சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். உதவித்தொகை பெற்று மூன்று ஆண்டுகள் முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தேவையில்லை.

No comments:

Post a Comment