Pages

Saturday, August 18, 2012

வங்கி ஊழியர்கள் 22, 23–ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு


– வங்கி துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கையை கண்டெல்வால் கமிட்டி தாக்கல் செய்து உள்ளது. அதில் வங்கி பணிகளை வெளியாட்கள் மூலம் செய்வது உள்ளிட்ட சில பரிந்துரைகள் இடம்பெற்று உள்ளன. இந்த நிலையில் கண்டெல்வால் கமிட்டியின் சிபாரிசு செய்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வருகிற 22, 23–ந் தேதி ஆகிய இரு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இந்த தகவலை வங்கி தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment