லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் தேசியக் கொடியினை, குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம், ஏந்தி வலம் வர இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி கோலகலமாக தொடங்கிய லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழாவில் பிரபல பாப் பாடகி மெலானியின் இசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதனைத்தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் வீரர்கள் தேசியக்கொடியுடன் அணிவகுக்க இருக்கின்றனர். இதில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடியினை ஏந்தி வலம் வருகிறார்
No comments:
Post a Comment