Pages

Saturday, August 25, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் மூன்று இடங்களைப் பிடித்தோர் விவரம்


தமிழகத்தில் கடந்த மாதம் 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாயின. ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி,  முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் புங்கமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம். திவ்யா பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் அயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த பி. சித்ராவும், மூன்றாம் இடத்தை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்வாணியும் பிடித்துள்ளனர்.  

No comments:

Post a Comment