ரமலான் பண்டிகை இந்தியாவில் நாளை கொண்டாடப்படுவதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரமலான் நன்னாளில் குரானில் கூறிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அன்பு, ஒற்றுமை, இரக்கம், பாசம் முதலியவை தழைக்கவும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், அண்டை அயலாரிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் எடுத்துரைத்த போதனைகளை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் போதித்த மணிவாசகங்களை மனதில் பதித்தும், எளியோர்க்கு ஈந்தும், நோன்புக் கடமைகளை நிறைவேற்றியும், ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிறருக்கு கொடுத்து உதவும் பெரும் பண்பை போற்றும் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Pages
▼
No comments:
Post a Comment