ரயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் அடையாள அட்டை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவி்ப்பு விரைவில் வெளியாகும் என ரயி்ல்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு செய்யப்பட்ட நபர் தான் ரயிலில் பயணம் செய்கிறார் என்பதை உறுதி செய்யவும், புரோக்கர்கள் முறைகேடாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால், பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழங்கும் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளிக்கும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்பட 9 அடையாள ஆவணங்களை பயணிகள் எடுத்துச் செல்லலாம். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்கள், தட்கல் மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட் பெற்று பயணம் செய்பவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Pages
▼
No comments:
Post a Comment