Pages

Wednesday, August 15, 2012

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, * தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்த பி.டபிள்யு.சி.டேவிதார், உயர் கல்வித் துறை சிறப்புச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * சென்னை பணிகள் பிரிவு இணை ஆணையராகப் பதவி வகித்த ஆர்.ஆனந்தகுமார், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * பொதுத்துறை துணைச் செயலராக இருந்த டி.பி.ராஜேஷ், பேரூராட்சிகள் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * சர்க்கரைப் பிரிவில் கூடுதல் இயக்குநராக இருந்த பி.செந்தில்குமார் பொதுத்துறை துணைச் செயலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment