இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 24, 2015

மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

��TNPTF MANI��

அரசுப் பள்ளி மாணவியருக்கு ஜூலை 1முதல் கராத்தே பயிற்சி

��அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கராத்தே பயிற்சி வழங்கப்படவுள்ளது

��அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியிலுள்ள எட்டாம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைக்கு வழங்கப்படவுள்ளது

��மாவட்டத்துக்கு 500மாணவியர்  தேர்வு செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்

��ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவை,திருப்பூரில்  மாவட்டங்களில் தேர்வு நடக்கிறது

��அதிக எண்ணிக்கையில் இருந்தால் பள்ளியிலேயே பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆதார் இனி கட்டாயம்

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின், பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மூலம், ஜாதி வாரியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், மாணவியருக்கு மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக பல திட்டங்களில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

கல்லுாரிகளில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பு மாணவர்கள், தேசிய திறனறித் தேர்வு எழுதிய மாணவர்கள் உள்ளிட்டோருக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மூலம், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடக்கின்றன; பயனாளிகளுக்கு உதவித்தொகை சரியாகச் சென்று சேர்வதில்லை என, பல தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், உதவித்தொகை பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு ஆதார் எண் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில், வங்கிக் கணக்கில் நேரடியாக கல்வி உதவித் தொகையை வழங்க உள்ளதாக, மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் நிதியுதவி, இனி வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், தற்போது ஆதார் எண் வைத்துள்ள மாணவர்கள் பட்டியலைத் தயாரிக்க, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

25% இடஒதுக்கீட்டில் ஆறாம் வகுப்பு சேர்க்கை நிறுத்தம்

மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவசமாக சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி 2013--14, 2014--15ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., 1ம்வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் அம்மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக வழங்காததால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு அதற்கான நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த கல்வியாண்டு முதல் இத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை மட்டும் நிறுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“கடந்த இரு கல்வியாண்டுகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு அதற்கான கல்விக்கட்டணம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் பள்ளி ஆரம்ப நிலை வகுப்புகளில் அதாவது எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்க அரசு உத்தரவிட்டது.

ஆறாம் வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவ்வகுப்பில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும். ஆரம்ப நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாவதற்காக நவம்பர் வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது,” என்றார்

அலைபேசி ரோமிங் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 'ஒரு இந்தியா - ஒரு எண்' என்ற திட்டத்தின் கீழ், அலைபேசிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள, இலவச 'ரோமிங்' திட்டம், ஓராண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பின், ரோமிங் கட்டணம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது. தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தை சேர்ந்த எண்ணை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தினால், உள் அழைப்புகளுக்கும், வெளியே செல்லும் அழைப்புகளுக்கும் ரோமிங் கட்டணம் உண்டு.

இதனால், அலைபேசி வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டண சுமையை குறைக்க, 'ஒரு இந்தியா - ஒரு எண்' திட்டம் மூலம், தொலைத் தொடர்பு வட்டத்தை தாண்டி செல்லும் வாடிக்கையாளர்களுக்கான, ரோமிங் கட்டணத்தை, மத்திய தொலை தொடர்புத் துறை, கடந்த 15ம் தேதியில் இருந்து ரத்து செய்தது. இதன்மூலம், பி.எஸ்.என்.எல்., அலைபேசி வாடிக்கையாளர்கள், நாடு முழுவதும் ஒரே எண்ணை பயன்படுத்தலாம்; அதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை தொடர்ந்து, சில தனியார் அலைபேசி நிறுவனங்கள், ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், 'ரோமிங் கட்டண ரத்து சலுகை, ஓராண்டுக்கு மட்டுமே' என, தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரோமிங் கட்டண ரத்து என்பது, நல்லெண்ண அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இக்கட்டண சலுகை, 'போஸ்ட் பெய்டு, பிரீ பெய்டு' அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டுக்கு மட்டும் அமலில் இருக்கும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொலைத் தொடர்பு துறையில் நிலவும் போட்டியில், வாடிக்கையாளர்களை ஈர்க்கவே, ரோமிங் கட்டண சலுகை தற்காலிகமாக வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட காலத்துக்கு சலுகை அளித்தால், நஷ்டம் ஏற்படும். எனவே, நிரந்தரமாக இலவச ரோமிங் திட்டத்தை தொடர முடியாது' என்றார்.

மருத்துவம் சார்ந்த படிப்புக்கு ஜூலை 26முதல் விண்ணப்ப விநியோகம்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஜூலை 26 முதல் விண்ணப்ப விநியோகம்!

மருத்துவம் சார்ந்த இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 26ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.
டிப்ளமோ, நர்சிங், பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்) பி.பார்ம் (லேட்ரல் என்டரி) ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு  ஜூன் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதி வரை பெறலாம். ஜூலை 9-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
கூடுதல் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Abl class mingled 1&2nd std

அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21aE1sTkNoRVlKZHc/view?usp=sharing

அனைத்து வகைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும்.சிறப்பு முகாம்

Tuesday, June 23, 2015

ஆன் லைன் மூலம் பாடப்புத்தகம் விற்பனை.மூன்று மாவட்டங்களில் அமல்

பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சமச்சீர் கல்வித் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் சேவை கழகம் சார்பில், பாட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரே நேரத்தில்... தனியார் பள்ளி ஆசிரியர்கள், பாடநுால் கழக கிடங்குகளுக்கு செல்லும் போது, சில பாட புத்தகங்கள் இருப்பு இல்லை என்ற பதில் கிடைக்கிறது. பல பள்ளிகளின் ஊழியர்கள், ஒரே நேரத்தில் வருவதால், பணம் செலுத்த நீண்டநேரம், வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1க்கு மட்டும், ஆன் - லைன் மூலம், பாட புத்தக விற்பனை திட்டத்தை, பாடநுால் கழகம் துவக்கிஉள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சோதனை முறையில், இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகத்தினர், பாடநுால் கழக, 'இன்ட்ரானெட்' தளத்தில், புத்தக இருப்பு நிலையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப, 'நெட் பேங்கிங்' வசதி மூலம் பணம் செலுத்தி, 'ஆர்டர்' செய்யலாம். அடுத்த ஆண்டு முதல் பணம் செலுத்திய ரசீதை, பாடநுால் கழக மாவட்ட கிடங்கில் கொடுத்து புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, பிளஸ் 1க்கு மட்டும், மூன்று மாவட்டங்களில், ஆன் - லைன் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பின், சில்லறை விற்பனையிலும் அமலுக்கு வரும்' என்றனர்.

அரசுப்பள்ளிகளில் தினமும் 15நிமிடம் யோகா பயிற்சி

'அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:கடந்த 2014 அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடங்கள் முன் யோகா பயிற்சியை தினமும் கடைபிடிக்க வேண்டும்;

இந்த பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 நிமிடம் யோகா; 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 15 நிமிடம் யோகா; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 15 நிமிடங்கள் யோகா ஐந்து நிமிடங்கள் தியானம் பயிற்சி அளிக்க வேண்டும்.தியான பயிற்சியை காலையில் வகுப்பறையில் நடக்கும் இறை வழிபாட்டில் நடத்த வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட்

இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும் என, போக்குவரத்து துறை அதி காரிகள் கூறியுள்ளனர்.

ஜூலை, 1ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஹெல்மெட் அணிவதை, 100 சதவீதம் அமல்படுத்தும் வகையில், அரசு துறைகளும், தனியார் அமைப்பு களும், பல வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.வாகன பதிவின் போதும், லைசென்ஸ் எடுக்கச் செல்லும் போதும், ஹெல்மெட் அவசியமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது பெரும்பாலானோர், பள்ளிகளுக்கு, குழந்தைகளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டுமா என்ற கேள்வி யும் எழுந்து உள்ளது. இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு சக்கர வாகனத்தை பதிவு செய்து தான், வாகன உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும். வாகனத்தை விற்கும் நிறுவனமே, கூடவே, ஹெல்மெட் வழங்க வேண்டும். ஒருவேளை, வாகன பதிவுக்கு உரிமையாளர் செல்ல நேரிடும் போது, ஹெல்மெட் வாங்கிச் செல்ல வேண்டியதில்லை. லைசென்ஸ் வழங்குவதற்கு முன், ஓட்டுனர் சோதனையின் போதே, ஹெல்மெட் அணிந்து தான் ஓட்டிக் காட்ட வேண்டும். இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது.

இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தான் மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அப்படியானால், இது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார். ஆனால், பெரும்பாலான ஹெல்மெட் விற்பனை கடைகளில், குழந்தைகளுக்கான ஹெல்மெட் இல்லை என்பதால், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

6முதல் ப்ளஸ் 2வரை சிறப்பு வகுப்புகள்

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது.

கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது. சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்த, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன், ஒரு மணி நேரம்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மாலையில் வகுப்புகள் முடிந்த பின், ஒன்றரை மணி நேரம், சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

'இந்த திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை, ஆசிரியர்கள் முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, தலைமை ஆசிரியருடன் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர் இல்லை என்ற காரணம் காட்டி, சிறப்பு வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Minorities application detail

பள்ளியில் பயிலும்  சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி  உதவித்தொகை  பெறுவதற்கான விண்ணப்பம் (Fresh & Renewal ) கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm.
சம்பந்தப்பட்ட மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2015.

Minorities scholarship application

Click below

http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm

Monday, June 22, 2015

பள்ளியில் மீண்டும் நீதி போதனை வகுப்பு

பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
  
இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

இத்தகைய சூழலில், வகுப் பில் தங்களை அடிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிப்பது (சென்னை யில் ஒரு ஆசிரியை மாணவ ரால் கத்தியால் குத்திக் கொல் லப்பட்ட சம்பவமும் நடந்தது), வகுப்பில் பாடம் நடத்துகிற ஆசிரியர்களைக் கேலி செய் வது, குடித்துவிட்டு பள்ளிச் சீருடையில் தெருவோரம் போதையில் மயங்கிக்கிடப்பது போன்ற சம்பவங்களும் அவ்வப் போது நடக்கத் தொடங்கின. இதுபோன்ற நிலையை மாற்ற, பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:

இந்த ஆண்டிலிருந்து 6 முதல் 10-ம் வகுப்பு வரையில் நீதி போதனை வகுப்பு அதா வது நல்லொழுக்கக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்படும். வாரத்தில் ஒருநாள் கட்டாயம் நீதி போதனை வகுப்பு இருக்கும்.

மற்றவர்களுக்கு உதவி செய்தல், பெரியோரை மதித் தல், கீழ்ப்படிதல், உண்மை, நீதி, நியாயம், நேர்மை, நாட்டுப் பற்று, நட்புறவு, குழுஉணர்வு என 60 விதமான மதிப்பீடுகள், அன்றாடம் நிகழும் மனதை தொடுகின்ற உண்மைச் சம்பவங் கள் மற்றும் சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் மூலம் மாண வர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.

பேருந்துகளில் வயதான வர்கள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம் கொடுப்பது பற்றிக்கூட சொல்லிக் கொடுக் கப்படும். அறிவுரை வழங்கு வதுபோன்று இல்லாமல் மாணவர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கேட்கும் வகையில் வகுப்பு அமைந் திருக்கும். அவர்களின் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் விஷயங்களை அடிப்படை யாகக் கொண்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் படிப் புக்கும் பயனுள்ளாக இருக்கும்.

நீதி போதனை வகுப்புக்கென ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், நீதி போதனை வகுப்புக்காக சிறப்பு கையேடும் தயாரிக்கப்படும். 6, 7, 8-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்படும். அவர்களுக்கு நேர்மறை சிந்தனை, மதுவின் தீமைகள், போதை பழக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வது என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.

இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு எப்போது?

பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளன.

அதேபோல, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 1,600-க்கும் மேல் காலியாக உள்ளன. வழக்கமாக, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இதுதொடர்பான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது.

எந்தவிதப் புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்தார். இந்தக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மணிவாசன் கோரினார்.

முதல்கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும், அதைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரை பல பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் உள்ளதால் பணி நிரவலுக்குப் பிறகு கடைசியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலையாசிரியருக்கு விரைவில் பதவி உயர்வு

பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.-

அட்டையின்றி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி

வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்தால், நான்கு இலக்க, 'எம்பின்' (மொபைல் பர்சனல் ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும். இதை பணப் பரிவர்த்தனைக்கான, 'பின்' நம்பராக பயன்படுத்தலாம்.

அனைத்து வங்கிகளும் இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன. சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்., இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடைமுறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும் வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில் இருந்து பணத்தை எடுக்கலாம்.