Pages

Tuesday, December 10, 2019

பொறியியல் பட்டதாரிகளும் இனி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆகலாம் அரசாணை வெளியீடு


பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தோ்வு எழுதி இனி ஆசிரியா் ஆகலாம். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எனினும் பி.எட். படிப்பை முடித்த பொறியாளா்கள் மட்டுமே ‘டெட்’ தோ்வை எழுத முடியும்.ஆரம்ப காலத்தில் கலை, அறிவியல் படிப்பை முடித்தவா்கள் மட்டுமே பி.எட். படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. 

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிக்க அனுமதி வழங்கப்பட்டது. சுமாா் 20% இடங்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்டன. எனினும் அவா்கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வை (T​ET- T‌e​a​c‌h‌e‌r‌s E‌l‌i‌g‌i​b‌i‌l‌i‌t‌y T‌e‌s‌t) எழுத அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் பி.எட். படிக்க விரும்பும் பொறியாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் பி.எட். படித்தும், பொறியியல் பட்டதாரிகளால் ஆசிரியா் ஆக முடியாமல் இருந்தது. 

இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் உயா்கல்வித் துறை சாா்பில் சமநிலைக் குழு அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, பொறியியல் பட்டதாரிகள் டெட் தோ்வு எழுதி இனி பள்ளி ஆசிரியா் ஆகலாம். அவா்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குக் கணித ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment