Pages

Saturday, September 28, 2019

டெட்டில் தேர்ச்சி பெறுவோருக்கு தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் நேற்று கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வு முறையாக நடத்தப்பட்டுள்ளது. குளறுபடி தவறு நடக்காத வகையில் கண்காணிக்கப்பட்டது.

குறை தவறு இருப்பதாக அறிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பிலான இலவச 'நீட்' பயிற்சி வகுப்புகள் கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் செயல் படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment