Pages

Wednesday, May 22, 2019

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்?


தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து கடும் வெயில் காரணமாக குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும் அவர்களது நலன் கருதி பள்ளித் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதேபோன்று சமூக வலைதளங்களிலும் இதே கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தினர். இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே இறுதி வாரத்தில் வரவிருக்கும் பருவநிலையைப் பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment