Pages

Tuesday, April 30, 2019

24 கல்வி மாவட்ட பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறை அமல்


24 கல்வி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர் வருகைப்பதிவுக்கான 'பயோ மெட்ரிக்' முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதை உறுதி செய்ய 'பயோமெட்ரிக் 'முறை நடைமுறைக்கு வர உள்ளது.

தொட்டுணர் கருவியுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி சென்னையில் நடக்கிறது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, செஞ்சி, திருக்கோவிலுார், விழுப்புரம், உளுந்துார் பேட்டை, கரூர், குளித்தலை, மண்டபம், பரமக்குடி,ராமநாதபுரம்,விருதுநகர், மன்னார்குடி, திருவாரூர், முசிறி, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், பெருந்துறை,திருவட்டார், வள்ளியூர், வடலுார், வெப்பூர், எடப்பாடி ஆகிய 24 கல்வி மாவட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் 'பயோ மெட்ரிக் 'வருகை நடைமுறைப்படுத்த உள்ளது.

எனவே மே 6க்குள் கல்வி மாவட்டம் சார்ந்த அனைத்து விபரங்களையும் முடிக்க வேண்டும்.இதனை முதன்மை கல்வி அலுவலரின்ஒப்புதலுடன் தொழிற்கல்வி இணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment