Pages

Saturday, August 25, 2018

1,932 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 1,932 ஆசிரியர்களை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்ற விதிமுறையைப் பின்பற்றக் கூடாது என்றும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தணிக்கைத் துறை இயக்குநர், நிதித் துறையிடம் ஆலோசித்து அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment