Pages

Thursday, August 09, 2018

பத்தாம் வகுப்பு: ஆக.16-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 16-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment