Pages

Monday, May 28, 2018

52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன


மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.கல்வி துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கல்வி அலுவலங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவலங்கள், 3 முறைசாரா மாவட்ட கல்வி அலுவலகங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலங்கள் என 52 அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, 52 புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவக்க அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment