Pages

Thursday, March 15, 2018

மாணவர்களுக்கு புத்தகப்பை பள்ளி கல்வித்துறை அறிமுகம்


அடுத்த கல்வியாண்டில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க, புதிய வடிவம் மற்றும் நிறத்தில், புத்தகப்பையை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகம், காலணி உட்பட, பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வியாண்டு துவங்கும் முன் உத்தேச மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு புத்தகப்பை தயாரிக்கப்படும்.கடந்த ஆண்டு பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலரில் புத்தகப்பை வழங்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், புத்தகப்பையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. நீலம் மற்றும் ஆரஞ்சு நிறுத்தில், புத்தகப்பை புதிய வடிவம் பெற்றுள்ளது. அதில் ஒரு புறத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., தற்போதைய முதல்வர் பழனிசாமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளன

No comments:

Post a Comment