Pages

Wednesday, March 28, 2018

தரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை? பட்டியல் அனுப்ப உத்தரவு


தரம் உயர்த்தப்படும் தகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில், 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளிகள் பொறுத்தமட்டில், தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தொடக்க கல்வித்துறையோடு இணைந்து, மாவட்ட வாரியாக தகுதிவாய்ந்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள நடுநிலைப் பள்ளிக்கு, 3 ஏக்கர் நிலம் இருப்பது அவசியம். புறம்போக்கு, தானமாகவழங்கப்பட உள்ள நிலங்களை, கணக்கு காட்ட இயலாது. பொதுமக்கள் பங்கு தொகையாக, அரசு கணக்கில் ஒரு லட்சம் செலுத்த வேண்டும்.உரிய கட்டமைப்பு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி கொண்ட பள்ளிகளே, தரம் உயர்த்த பரிந்துரைக்க வேண்டுமென, இயக்குனர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment