Pages

Friday, December 08, 2017

அவகாசம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

'பான் எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும், ஜூலை, 1 முதல், புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டது.

அது தவிர, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை வழங்கப்பட்டுள்ள, 33 கோடி பான் கார்டுகளில், நவ., நிலவரப்படி, 13.28 கோடி பான் கார்டுடன், ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பான் கார்டுடன், ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பான் கார்டுடன், ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், ஜூலை, 31 வரை வழங்கப்பட்டது. பின் அது, ஆக., 31 வரையிலும், அதன்பின், டிச., 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

No comments:

Post a Comment