Pages

Sunday, November 12, 2017

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்


சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.அரசு பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் சங்கம் அமைத்து பள்ளிகளுக்கு பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிப்பதாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 662 இடங்களை நிரப்ப செப்டம்பரில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் 482 இடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாமா என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. ஓவியம், இசை, தையல் போன்ற சிறப்பு பாடங்களுக்கு உயர்கல்வியில் போதிய முக்கியத்துவம் இல்லை. எனவே அந்த பாடங்களை நடத்த பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து விட்டு, தற்போது காலியாக உள்ள இடங்களை பட்டதாரி பணியிடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.இதன்படி அரசு பள்ளிகளின் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இன்றி கூடுதலாக 500 பணியிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment