Pages

Thursday, October 19, 2017

ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'; முதல்வரிடம் குவியும் மனுக்கள்


தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., 11ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.

இன்று விளக்க கூட்டம்

இந்த உயர்வு அறிவிப்பு, ஊதிய முரண்பாடு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள், மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகம் முன், இன்று விளக்க கூட்டம் நடத்துகின்றனர். அதன்பின், 'நீதிமன்றத்தை அணுகுவோம்; அதிலும், முடிவு கிடைக்காவிட்டால், போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment