Pages

Thursday, October 12, 2017

அக மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரும் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!


பதினொன்று மற்றும் 12ஆம் வகுப்புகளில் அக மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50-ஐ ரத்து செய்யக்கோரும் வழக்கில், பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதில் மனு தாக்கல்செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதிப்பெண்கள் வழங்குவதிலும், தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிப்பதிலும் பாகுபாடு காட்டுவது சட்ட விரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment