Pages

Wednesday, October 11, 2017

கிரேடு வாரியாக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு வெளியீடு!

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 21,792-26,720, இளநிலை உதவியாளர் ரூ.37,936,-ல் இருந்து ரூ.-47,485, இடைநிலை ஆசிரியர்களுக்கான விகிதம் ரூ.40,650-ல் இருந்து ரூ.50,740, ஆய்வாளர்களின் ஊதிய விகிதம் ரூ.69,184ல் இருந்து ரூ.-84,900, சப் கலெக்டர்களுக்கு ரூ.81,190-ல் இருந்து ரூ.98,945, சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.10,810-ல் இருந்து ரூ.13,270, சத்துணவு சமையலர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 6562-ரூ.8,680, இந்திய குடிமைப்பணி அலுவலர் இல்ல அலுவலக உதவியாளர் தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பார்வைக்குறைபாடு, மாற்றுத் திறனாளி, காது கேளாதோர் ஊர்திப்படி ரூ.2,500 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வுதியத்தொகை குறைந்த பட்சம் ரூ.7,850ல் இருந்து அதிகபட்சமாக ரூ,1,12, 500 ஆகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.7,850 -ல் இருந்து 67,500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.ஆயிரத்து 500-ல்இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக ரூ.14,719 கோடியாகும். இதில், ரூ.8015.99 கோடி அரசு அலுவலர்களுக்கான சம்பளமும் ரூ.6702.91 கோடி ஓய்வூதியதாரர்களுக்கும் செலவாகும்

No comments:

Post a Comment