Pages

Sunday, October 22, 2017

அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்


தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான பல்வேறு புதிய திட்டங்களை, கல்வித்துறை அறிவித்து வருகிறது

இதன்படி, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'எலைட்' சிறப்பு பயிற்சி திட்டம், 'பெஸ்ட்' மாதிரி தேர்வு திட்டம், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், தினமும் மாதிரி தேர்வு திட்டம் போன்றவை, பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்களை தயார் செய்வதற்கு, அரையாண்டு தேர்வுக்கு முன், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு, நவ., 13ல் துவங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை, தேர்வு அட்டவணையை தயாரித்து உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நவ., 13ல் துவங்கும் தேர்வு, நவ., 24ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, நவ., 15ல் தேர்வு துவங்கி, நவ., 24ல் முடிகிறது. இதற்கேற்ப, பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களை தயார்படுத்த வும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment