Pages

Monday, October 09, 2017

அக்.11-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்: ஏழாவது ஊதியக்குழு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு


தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதலமைச்சரிடம் வழங்கியது.

இக்கூட்டத்தில், அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வை அமல்படுத்துவது தொடர்பாகவும், இடைக்கால நிவாரணத் தொகை எத்தனை சதவீதம் வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment