Pages

Friday, September 01, 2017

கணினிகளுக்கு பாதுகாப்பு

புளூ வேல்' இணையதள விளையாட்டின் மிரட்டலை தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில் கணினிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்' இணையதள விளையாட்டை மாணவர்கள் விளையாடாமல் தடுக்க, பள்ளிகளில் கணினிகளை பாதுகாப்பாக இயக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்புகள், ஐ.சி.டி., என்ற கணினி வழி கல்வி மையங்கள் போன்றவற்றில், கணினிகளில், ஆன் - லைன் விளையாட்டுகளை, தொழில்நுட்ப ரீதியாக தடுக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு போன்ற விபரங்களை சேகரிக்கும், அலுவலக கணினிகளில், ஆன் - லைன் விளையாட்டுகள் இல்லாமல், பாதுகாப்பாக பயன்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment