Pages

Wednesday, September 27, 2017

நவ. 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை


ரயில்வேயின் புதிய கால அட்டவணை நவ. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, இப்போதுள்ள கால அட்டவணை அக். 31-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்வே கால அட்டவணை ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் அக். மாதம் புதிய அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இவ்வாண்டுக்கான புதிய கால அட்டவணை வரும் அக்.1ஆம் தேதிக்குப் பதிலாக அக்.15 ஆம் தேதி வெளியாகும் என ரயில்வே துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இப்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு நவ.1-ஆம் தேதி புதிய அட்டவணை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை (அக்டோபர் 31) இப்போது உள்ள கால அட்டவணையே செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment