Pages

Sunday, August 06, 2017

ஆசிரியர் பட்டயப்பயிற்சி கலந்தாய்வு

*D.ELE.ED ADMISSION | 2017-18-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை (07.08.2017) தொடங்கிறது.*

ஆசிரியர் பட்டய படிப்பு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது | 2017-18-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கிறது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-2018ம் கல்வியாண் டுக்கான தொடக்கக் கல்வி பட் டயப்படிப்பிற்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனங்களில் ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கான அழைப் புக் கடிதத்தை (Call Letter) அஞ்சலில் அனுப்புவதோடு தொலைபேசி வாயிலாகவும் விவரம் தெரியப்படுத்தப்பட் டுள்ளது. முதல் நாளான நாளை காலை ஆங்கிலம், உருது, தெலுங்கு மற்றும் மலையாள மொழி விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளி, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசு விண்ணப்பதாரர்கள், அறிவியல், கலை மற்றும் தொழிற்கல்வி ஆண் விண்ணப்ப தாரர்களுக்கும் மாலையில் தொழிற்கல்வி பெண் விண் ணப்பதாரர்களுக்கும் கலந் தாய்வு நடக்கும். ஆக. 8-ம் தேதியன்று காலை கலைப்பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கும் மாலையில் அறிவியல் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக் கும் (தரவரிசை 1 முதல் 400 வரை) கலந்தாய்வு நடக்கும். ஆக. 9-ம் தேதியன்று காலை அறிவியல் பிரிவு பெண் விண் ணப்பதாரர்களுக்கு (தரவரிசை 401 முதல் இறுதி எண் வரை) கலந்தாய்வு நடக்கும்.

No comments:

Post a Comment