Pages

Tuesday, August 29, 2017

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்! - நிதிஆயோக் பரிந்துரை

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தனியார்-பொதுத்துறை கூட்டு (PPP) என்ற திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறைந்த மற்றும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கூறியிருக்கிறது நிதிஆயோக். இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாண்டு செயல்திட்டத்தின் கீழ் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’கடந்த 2010-2014-ம் ஆண்டு இடைவெளியில் 13,500 அரசுப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. ஆனால், இதே காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.3 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.85 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 3.7 லட்சம் அரசுப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இது மொத்த அரசுப் பள்ளிகளில் 36 சதவிகிதம் ஆகும்.

ஆசியர்கள் வருகைப் பதிவு குறைவு, பயிற்றுவித்தலில் குறைவான நேரமே செலவிடுவது, தரமில்லாத கற்றல் முறைகள் ஆகியவைகளே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணங்கள். இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையை மாற்ற ஈடுபாடு கொண்ட மாநிலங்கள் உதவியுடன் பணிக்குழு ஒன்றை உருவாக்கி அனைத்து சாதகமான சூழல்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment