Pages

Sunday, July 30, 2017

பிளஸ் 1 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்


தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 450 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால் பிளஸ்–1 மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் நாளைக்கு (அதாவது இன்று) வழங்கப்படும். இதற்காக 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அந்த மாதிரி வினாத்தாள் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம். அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

No comments:

Post a Comment