Pages

Sunday, May 14, 2017

மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது


பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அனைத்தும், டிஜிட்டல் மயமாக உள்ளது.

மாணவர்கள், ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்றால், அவர்கள் சேரும் பள்ளிக்கே, ஆன்லைனில் மாற்று சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சான்றிதழின் உண்மைத்தன்மையை, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், மணிக்கணக்கில், சான்றிதழ்களை தேட வேண்டியதும் இல்லை.

சான்றிதழ்கள் காணாமல் போகும் பிரச்னைக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த விபரங்களும், அந்த பள்ளிகளில், டிஜிட்டல் மயமாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment