வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் உயிர்ச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பி.எஃப். நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓய்வூதியதாரர்கள் இணையதளம் மூலமாகவும் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். சான்றிதழை சமர்ப்பிக்காவிடில், அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காதவர்களுக்கு மே மாதத்திலிருந்து ஓய்வூதிய பலன்கள் நிறுத்தப்படும். ஓய்வூதியதாரர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment