Pages

Thursday, April 27, 2017

தாமதமாக விண்ணப்பித்தவர்களை நீட் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தாமதமாக விண்ணப்பித்தவர்களை நீட் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு எனப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. தளத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தேர்வுக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து 38 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி 38 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்றும் அனுமதி வழங்கவில்லை என்றால்,சி.பி.எஸ்.இ. இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment