Pages

Wednesday, April 19, 2017

பொறியியல் படிப்பில் சேர மே 1 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு


பொறியியல் படிப்பில் சேர மே 1 முதல் 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்பிக்க ஜூன் 3 கடைசி நாள் ஆகும். ஜூன் 20ல் ரேண்டம் எண் வெளியிடப்படும் அதனை தொடர்ந்து ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

ஜூன் 27-ல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என எதிர்பார்க்கிறேன்.

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி விரைவில் நிரப்பபடும். கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் துணைவேந்தர்களை நியமிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment