Pages

Monday, January 09, 2017

TNPTF கண்டன அறிக்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:"தமிழர் திருநாள்"என்று உலகெங்கும் வாழும் 10கோடி தமிழர்களால் உவகையுடன் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தமிழக மக்களுக்கு மிகுந்த மனத்துயரை ஏற் படுத்தியுள்ளது.தமிழக மக்களால் சாதி,மத,இன பேதமின்றி கொண்டாடப்படும் மகத்தான திருநாள் பொங்கல் திருநாள்.இது தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா.உலகிற்கே நாகரிகத்தைப் போதித்த தமிழர்களின் உணர்வுத் திருவிழா.தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது தமிழக மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது.தமிழக மக்கள் அறுவடைத் திருநாளாகவும்,கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும்,உழவர்களுக்கு உறுதுணையாக
விளங்கும் கால்நடைகளைப் போற்றி வணங்கும் திருவிழாவாகவும் ஆயிரக்கணக்கன ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழாவிற்கு விடுமுறை மறுத்துள்ள மத்திய அரசின் இச்செயலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.(செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்)

No comments:

Post a Comment