தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு நடத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் டெட் தேர்வு நடத்துவதற்கான சட்ட சிக்கல்கள் ஒட்டுமொத்தமாக களையப்பட்டு, ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும். இதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment