Pages

Monday, January 30, 2017

பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்


வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் பேசியது:

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசு மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் குறுக்கிட்டுக் கூறியது: வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பாடத்திட்டத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்றார்.

No comments:

Post a Comment