கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள், முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சம்பளம்; எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளுக்காக, போராட்டம் நடக்கிறது. பிப்., 3ல் தொடக்க கல்வி இயக்குனரகம் முன், முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment