Pages

Sunday, January 01, 2017

இன்று பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம்  பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், 9ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டுத்  தேர்வு தொடங்கியது. கீழ் வகுப்புகளுக்கும் 7ம் தேதி மூன்றாம் பருவத் தேர்வுகள் தொடங்கின. 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்தன.  இதையடுத்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்பட  தொடங்குகின்றன.

முன்னதாக, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 3ம்  பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பள்ளி திறக்கும் நாளில் அனைத்து  மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் போய்சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்களும் இலவசப் பாடப்புத்தகங்களை பெற்று, அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும்  நேற்றே அனுப்பி வைத்தனர்.  இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment