Pages

Tuesday, January 03, 2017

15 வயது நிறைவடைந்தோருக்கு இன்றுமுதல் மீண்டும் ஆதார் பதிவு!


ஆதார் எண் பெற்று 15 வயது நிறைவடைந்தவர்கள் மீண்டும் தங்களது பயோ-மெட்ரிக் தகவல்களை புதன்கிழமை முதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 545 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 9,91,924 பேருக்கு ஆதார் எண்ணுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது பயோ-மெட்ரிக் தகவல்களை, வயது பூர்த்தியான நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்குச் சென்று விவரங்களை அளிக்க வேண்டும். இதற்காக புதன்கிழமை முதல் தகவல்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment