Pages

Saturday, December 31, 2016

கல்வி துறையில் 'மாபியா' கும்பல் நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்


கல்வி உட்பட, பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், 'மாபியா' கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்த நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கறுப்புப் பணத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி வரும், மாபியா கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யில், கல்வி மற்றும் எழுத்தறிவு பிரிவு செயலர், அனில் ஸ்வரூப், டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:கல்வித் துறை செயலராக பொறுப்பேற்றுள்ள நான், ஒரு மாதமாக, இந்த துறை குறித்து அலசி ஆராய்ந்த போது, மாபியா கும்பல்களின் ஆதிக்கம் இருப்பதை அறிய முடிந்தது. இந்த கும்பல்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி, கல்வித் துறையை துாய்மையாக்க வேண்டும் என, விரும்புகிறோம். கல்வித் துறையில், மாபெரும் புரட்சி நிகழ்ந்து வருகிறது.

நாட்டில், எழுத்தறிவு விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கல்வியின் தரத்தை உயர்த்துவதில், கவனம் செலுத்தப்பட வேண்டும். சமூகத்தில், விளிம்பு நிலையில் உள்ளோரை, தேசிய நீரோட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு


பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மாலையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அறிவியல் பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு குழு வீதம் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்

Thursday, December 29, 2016

செல்லிடப்பேசியில் பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை எப்படி? மத்திய வருவாய்த் துறை முன்னாள் செயலர் விளக்கம்


செல்லிடப்பேசியில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு செல்லிடப்பேசியில் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது எவ்வாறு என்பது குறித்து பயிற்சிகள் அளிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டியது அவசியம்.

செல்லிடப்பேசிகள் தயாரிப்பில் வெளிநாட்டினரே முன்னணியில் இருப்பதால் அவை பெரும்பாலும் ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்டே அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறு அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

செல்லிடப்பேசிகளில் வாட்ஸ் அப், முகநூல்கள் மூலமாக வரும் லிங்க்குகளை (வலைதள முகவரிகள்) நேரடியாகத் திறந்து பார்ப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படாதவாறு பாதுகாக்க முடியும்.

ஏடிஎம் அட்டைகளுக்கான கடவுச் சொற்களை ஏதாவது ஒரு இடத்தில் எழுதி வைக்கும்போது அதை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்த கடவுச்சொல் நமக்கும் மட்டுமே புரியும் வகையிலான குறியீட்டை மட்டும் எழுதி வைக்கலாம்.

குழந்தைகள்- மனைவியின் பிறந்த தினம், நெருங்கிய நண்பரின் பெயர் போன்றவற்றை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இணைய வழி வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) மேற்கொள்ளும்போது கடினமான கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆல்ஃபா நியூமரிக் எனப்படும் ஆங்கில எழுத்துகள்- எண்களுடன் கூடிய கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது சிறந்தது. எந்தவொரு இணையப் பரிவர்த்தனைக்கும் பற்று அட்டையைக் (டெபிட் கார்டு) காட்டிலும், கடன் அட்டையைப் (கிரடிட் கார்டு) பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும். ஏனெனில் கடன் அட்டைகள் காப்பீடு பெற்றிருப்பதுடன் அந்த அட்டையைப் பயன்படுத்தும்போது ரகசியக் குறியீடுகள் களவாடப்படாத பொறுப்பை வங்கிகளும் கண்காணிக்கின்றன.

அமெரிக்காவில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் கடன் அட்டையால் மேற்கொள்ளப்படுவதே இதற்கு சான்றாகும்.

அதேபோன்று வங்கிப் பரிவர்த்தனைகளை அதிகளவில் மேற்கொள்வோர் இரு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது சிறப்பான ஒன்று. இதைத் தொடர்ந்து பரிவர்த்தனைகளை பிரதான அல்லது அதிக பணமிருக்கும் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ளாமல் கூடுதல் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

பி.ஓ.எஸ். எனப்படும் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் பற்று, கடன் அட்டைகளை ஸ்வைப் செய்யும்போது அதில் நமது வங்கிக் கணக்கின் ஐ.எஃப்.எஸ். குறியீடு காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடைகள், பெட்ரோல் நிலையங்கள் என எந்தப் பரிவர்த்தனைக்கு அட்டைகளைப் பயன்படுத்தினாலும் அதற்குரிய கடவுச் சொல்லை நாம் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொகுப்பூதியம்-மதிப்பூதியம் பெறுவோருக்கு தனி உயர்வு


அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.20 முதல் ரூ.40 வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

மாதத்துக்கு ரூ.600 வரை தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக மாதம் ரூ.20 அளிக்கப் படும். ரூ.600-க்கு மேலாக தொகுப்பூதியம்-நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.40-ம் வழங்கப்படும். இந்த தனி உயர்வானது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற பிரிவினருக்கு தனி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 27, 2016

கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது, பிளஸ்-2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் கடும் நடவடிக்கை


கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேறு பள்ளிக்கு மாற்ற சான்றிதழ் 2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய (பெயிலாகும் நிலையில் உள்ள) மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் இவ்வியக்கத்தில் பெறப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை

எனவே இக்கல்வி ஆண்டு (2016-17) வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பள்ளிக்கு செல்போன்கள் கொண்டு வரும் மாணவ மாணவிகளை தடுக்க நடவடிக்கை


தகவல்களை பரிமாறிக்கொள்ள சம்பந்தப்பட்ட நபரை பல கிலோ மீட்டர் கடந்து சென்று பார்க்க வேண்டிய சூழலை மாற்றியது கம்பி வழி தொலைபேசி. அதிலிருந்தும் மாற்றியது செல்போன். இன்று செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். சிலர் 2, 3 செல்போன்களை வைத்திருக்கின்றனர். இந்த செல்போனின் அபார வளர்ச்சி காரணமாக வாட்ஸ்அப், பேஸ்புக் மட்டுமின்றி நேரில் சந்திப்பதை போன்று வீடியோ அழைப்புகளிலும் நினைத்தவுடன் பேசிக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது. ஆன்ட்ராய்டு செல்போன் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் செல்போன் இல்லாத வீடுகளே கிடையாது. அறிவு சார்ந்த தகவல்கள் எது வேண்டுமானாலும் புத்தகத்தை புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. செல்போன் மூலம் இணையதளத்தில் உலக விஷயங்கள் கையடக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் செல்போன்களை அறிவுசார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட அழிவு சார்ந்த விஷயங்களுக்கு அதிகப்படியானோர் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் வேதனை. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சராசரியாக வாரத்துக்கு 48 மணிநேரம் ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்பதே இதற்கு சாட்சி.

இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆங்காங்கே வாட்ஸ் அப், காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என குனிந்த தலை நிமிராமல் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களையும் கவனிக்காமல் செல்போன்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் சிறிய பிரச்னைகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு சந்திக்கும் மனநிலை மாறிவிடுகிறது. சாதாரண பிரச்னைக்கே தற்கொலை, வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவது போன்ற மனநிலைதான் மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. இந்த செல்போன் பயன்பாடு வீட்டிலும், வெளியே நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் என்று நின்றுவிடாமல் பள்ளிகளில் வகுப்பறையிலும் தொடர்வதுதான் இதைவிட கொடுமை. வகுப்பில் நடத்தும் பாடங்களையும் கவனிக்காமல் செல்போன்களில் கவனத்தை செலுத்துகின்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும், ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி செல்போன் பயன்பாடு இல்லாமல் இருக்கின்றனரா? என்பது கேள்விக்குறிதான்.

இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்களால் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் கிராமத்தில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளியில் படிக்கும் சிறுமியை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது கொலை செய்தான். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் மனித உரிமைகள் கழகத்துக்கு அனுப்பிய அறிக்கையில், ‘அந்த மாணவன் அடிக்கடி செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததால் அவனது மனநிலை மாறியுள்ளது. எனவே, தேவையான கவுன்சலிங் அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மேலும் போலீசார் விசாரணையில், பள்ளி அருகில் உள்ள இணையதள மையத்தில் அதன் உரிமையாளர்தான் பள்ளி மாணவனுக்கு ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் வகுப்பில் ஆபாச படம் பார்த்த தனியார் பள்ளி மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மது குடிக்கும்போது அதை அவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டு சிக்கியது. இப்படி தினமும் செல்போன்கள் பயன்பாட்டால் மாணவ, மாணவிகள் சீரழிவது தொடர்கதையாகவே இருக்கிறது.

பெரும்பாலும் மாணவர்களுக்கு பெற்றோர் செல்போன்களை வாங்கி கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்களே பள்ளிக்கு செல்லாமல் எங்காவது வேலைக்கு சென்று செல்போன் வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதவிர திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களிலும் மாணவர்கள் ஈடுபட வழிவகுத்துள்ளது இந்த செல்போன் மோகம். மாணவர்கள் அதிகப்படியான நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். எனவே, இதை ஆசிரியர்களே கண்காணிக்க வேண்டியுள்ளது. வகுப்பிற்கு செல்போன் கொண்டு வந்தால் அதை முறைப்படி பறிமுதல் செய்யவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் கல்வி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி எதிர்கால சமுதாயத்தை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி

💥TNPTF MANI💥

அரசு மேல்நிலைப்பள்ளிகளில்

1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி

தமிழ்-476,
ஆங்கிலம்-154
கணிதம்-71
இயற்பியல்-119
வேதியியல்-125
வரலாறு-73
பொருளாதாரம்-166
வணிகவியல்-99

*நேரடி நியமனம் 50சதவீதமும்,50சதவீதம் பதவி உயர்வும் வழங்கப்படும்

*நேரடி நியமனத்துக்கு 800 இடங்கள் ஒதுக்கப்படலாம்

*ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்புக்கு
காத்துக்
கொண்டிருக்கின்றனர்

TNPTF-TNSF மாற்றுக் கல்விக்கான முகாம்





TNPTF விழுதுகள்

புதிய கல்விக் கொள்கையின் பாதிப்புகள் தொடர்பான நூல்களின் மீதான,

*மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்*

26 & 27.12.2016

_ஊ.ஒ.பள்ளி, உப்பிலிபாளையம்_
_சென்னிமலை - ஈரோடு மாவட்டம்._

இன்றைய முதல் நாள் நிகழ்வில்,

மோசஸ் (TNPTF மாநிலத் தலைவர்)

பிரின்ஸ் கஜேந்திரபாபு
(பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை)

கார்த்திக்
(TNSF மாவட்டச் செயலாளர் - ஈரோடு)

உள்ளிட்டோர் வாசிப்பு முகாமை நடத்தினர்.

ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் TNPTF மாவட்டப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

posted from Bloggeroid

Sunday, December 25, 2016

இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி?

அனைத்து பள்ளிகளிலும் இனி எட்டாம் வகுப்புக்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி' என்ற மனிதவள மேம்பாட்டுத்துறையின் பரிந்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாயத் தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைவதாகவும். மாணவர்களுக்கு தோல்வி பயம் ஏற்படுவதில்லை என்பதால், அவர்களின் ஒழுக்கம் குறைகிறது என்கிறது மனிதவள மேம்பாட்டுத்துறை

த்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது . 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கல்

தங்கல் விமர்சனம்
-மணி

நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம்.
ஓபனிங் சாங்கோ,பஞ்ச் டயலாக்கோ இல்லாமல் அமீர்கான் அறிமுகம்

சங்கர பாண்டி வாத்தியார் ங்கிறது பள்ளிகூட வாத்தியார் இல்ல,குஸ்தி சொல்லிக்குடுக்கிற குஸ்தி வாத்தியார் னு நினைக்க வைக்கும் அவர் உடல்வாகு.மல்யுத்தம் மீது இளமையிலிருந்து விளையாடி விருது பெறும் அமீர் வறுமை காரணமாக இலட்சியத்தை தியாகம் செய்கிறார்.ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்தில் வேலை பார்க்கிறார்.பின் திருமணம்.
என் மகனை மல்யுத்த வீரனாக்குவேன் னு இலட்சிய வெறி குழந்தைக்கு கடத்த நினைக்கையில் பெண் குழந்தை பிறக்கிறது.

அடுத்த குழந்தை ஆணாக பிறக்க கிராமமே டிப்ஸ் தருகிறது.மீண்டும் பெண்.அடுத்தடுத்து பெண் என 4 பெண்கள்.
கிராமமே ஏளன பார்வை பார்க்கிறது.
வீட்டிலிருக்கிற மெடல்,இலட்சியமெல்லாம் ட்ரங்க் பெட்டியில் வச்சு பூட்டி விடுகிறார்.பெண் குழந்தை பார்க்கும்போதெல்லாம் கண்ணுல காசில்லாத ஏடிஎம்மை பார்ப்பது மாதிரி இருக்கிறது.

ஒரு முறை சக மாணவன் திட்டினான் என்பதற்காக கீதாவும்,பபிதாவும் புரட்டி எடுத்ததை பார்த்த அப்பா இருமகளையும் நீட் தேர்வுக்கு தயார் செய்யுற பிரைவேட் ஸ்கூல் மாதிரி ட்ரைன் அப் கொடுக்கிறார்.மனைவி எதிர்க்கிறாங்க.அவரிடம் அமீர் "ஒரு வருசம் மனசை கல்லாக்கிக்க,தோத்துட்டா வாழ்க்கை முழுசும் நான் மனசை கல்லாக்கிக்கிறேன்" சொல்றார்.
இடையில் அப்பா மீது கோபத்துடன் இருக்கும் பெண்கள் உறவுக்கார திருமணத்துக்கு சென்று டான்ஸ் ஆடுவதை அப்பா அங்கு வந்து அவர் அண்ணன் மகனை அடிக்கிறார்.

அந்த இரவு அதிக கோபம் மகள்களுக்கு அப்பா மீது.அப்போது திருமண பெண் உங்க அப்பா மாதிரி எனக்கு இல்லையேனு ஃபீல் பன்னுகிறார்.அப்போது அப்பாவின் தியாகம் புரிய ஆரம்பிச்சு சீரியசா பிராக்டீஸ் பண்ணுறாங்க.வர்தா புயலில் விழுந்த மரங்களை அப்புறபடுத்துவது மாதிரி

கைமேல் பலன் மாதிரி உள்ளூர் போட்டியில் கீதா ஆண்களுடன் மோதி வெற்றி பெறுகிறார்.ஊரே புது ஐநூறு ரூபாய்நோட்டை பார்த்த மாதிரி சந்தோசபடுறாங்க.இப்பிடியே தேசிய அளவில் தங்கம் வாங்குறாங்க கீதா.அப்பாவுக்கு அப்பவும் திருப்தி இல்ல.பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுங்கிற மாதிரி இந்தியா சார்பா விளையாடி தங்கம் வாங்கனும் னு சொல்றார்.

பாட்டியாலாவில் தேசிய விளையாட்டு பள்ளியில் சேர்த்து விடுறார்.அங்க பயிற்சியாளர் புது முறை சொல்கிறார்.அதில் ஒரு போட்டியில் கீதா தோற்றுவிடுகிறார்.மீண்டும் அப்பா அந்த ஊருக்கு வந்து பயிற்சி தருகிறார்.அப்பா டெக்னிக் பயன்படுத்தி இந்தியா சார்பாக தங்கம் வாங்கும்போதும், தங்கம் பெற்றவரின் நாட்டு தேசியகீதத்தை இசைக்கும்போது புல்லறிக்க வைக்கிறார் இயக்குநர்.

மனம் கவர்ந்தவை
*கதை அமீர்கானின் அண்ணன் மகன் சொல்கிறார்
*அனைத்து கதாபாத்திரங்களும் சம பங்கு

*ஒரு வருசம் மனசை கல்லாக்கிக்க,தோத்துட்டா வாழ்க்கை முழுசும் நான் மனசை கல்லாக்கிக்கிறேன்"

*இரண்டு பெண் பிறந்தால் ஆறுதல் சொல்பவரை அலட்சிய்ச்மாய் பார்த்து கடப்பது

*உள்நாட்டில் தங்கள்,வெளிநாட்டு வெள்ளி வாங்குனா மறந்திடுவாங்க.நீ தங்கம் வாங்கனும்.இந்தியாவுக்காக.

*மண்ணுக்கு நாம் கெளரவம் தரனும்.
அப்பதான் அது நமக்கு கவுரவம் தரும்

*அப்பாவா இருந்தா குரு வா இருக்க முடியல
குருவா இருந்தா அப்பாவா இருக்க முடியல

*ஆண் சமைச்சு பெண்ணுக்கு பரிமாற வைப்பார்

*யுத்தத்துல ஜெயிக்கிறதுக்கு முன்னாடி பயத்தை ஜெயிக்கணும்

*திட்டலுக்கு பதிலா இப்ப கைதட்டல்
கிராம மக்கள்

*யானைக்கு strength இருக்கலாம்
ஆனா சிறுத்தைக்கு Technical strength தெரியும்

இறுதியில் அமீர்கான் சொல்லும் சபாஷ் என்ற வார்த்தைக்கு கைதட்டலே சபாசுக்கு சம்மதம்

பெண்களை பெற்ற அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்