Pages

Saturday, December 31, 2016

கல்வி துறையில் 'மாபியா' கும்பல் நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்


கல்வி உட்பட, பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், 'மாபியா' கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்த நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கறுப்புப் பணத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி வரும், மாபியா கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யில், கல்வி மற்றும் எழுத்தறிவு பிரிவு செயலர், அனில் ஸ்வரூப், டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:கல்வித் துறை செயலராக பொறுப்பேற்றுள்ள நான், ஒரு மாதமாக, இந்த துறை குறித்து அலசி ஆராய்ந்த போது, மாபியா கும்பல்களின் ஆதிக்கம் இருப்பதை அறிய முடிந்தது. இந்த கும்பல்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி, கல்வித் துறையை துாய்மையாக்க வேண்டும் என, விரும்புகிறோம். கல்வித் துறையில், மாபெரும் புரட்சி நிகழ்ந்து வருகிறது.

நாட்டில், எழுத்தறிவு விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கல்வியின் தரத்தை உயர்த்துவதில், கவனம் செலுத்தப்பட வேண்டும். சமூகத்தில், விளிம்பு நிலையில் உள்ளோரை, தேசிய நீரோட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment