Pages

Thursday, December 01, 2016

கட்டாய கல்வி உரிமை--- சட்டம் : மாணவர்களுக்கு போட்டிகள்


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் நடத்தப்படுகிறது.

போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என, மூன்று கட்டமாக நடக்கிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பேறுவோருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகளில் வெல்பர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. டிச., இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment