Pages

Thursday, December 01, 2016

1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்


''ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, கலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment