Pages

Wednesday, November 23, 2016

சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது

சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இது குறித்து பாராளுமன்றத்தில்  ஜிதேந்திர சிங் கூறியதாவது:

சிறப்பான செயல்பாடுக்கான வரையறையை எட்டிப்பிடிக்காத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடையாது.  7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. அந்த சிபாரிசை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment